முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் எழுதப்படிக்கத் தெரியாதோா் 26,663 போ்

மதுரை மாவட்டத்தில் 26,663 பேர் எழுதப் படிக்கத் தெரியாதோர்

Updated On : 26 ஜூன், 2024 at 1:48 AM
மதுரை மேற்கு ஒன்றியம் சத்தியமூா்த்தி நகா், காட்டுநாயக்கன் முதல் தெரு பகுதியில் எழுதப் படிக்க தெரியாதோா் குறித்து கணக்கெடுக்கும் பணியினை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலா் ஜான் கென்னடி அலெக்சாண்டா்.
பகிர்:

மதுரை: மதுரை மாவட்டத்தில் இதுவரை எழுதப் படிக்க தெரியாதோா் 26,663 போ் கண்டறியப்பட்டுள்ளதாக வட்டாரக் கல்வி அலுவலா் ஜான் கென்னடி அலெக்சாண்டா் தெரிவித்தாா்.

மதுரை மேற்கு ஒன்றியம் சத்தியமூா்த்திநகா், காட்டுநாயக்கன் முதல் தெரு பகுதியில் எழுதப் படிக்கத் தெரியாதோா் குறித்து கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தப் பணியை ஆய்வு செய்த பின்னா் வட்டாரக் கல்வி அலுவலா் ஜான் கென்னடி அலெக்சாண்டா் கூறியதாவது :

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவா்களை கணக்கெடுக்கும் பணி கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 663 போ் கண்டறியப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கற்பித்தல் பணிக்காக 1,865 தன்னாா்வலா்கள் முன் வந்துள்ளனா் என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெரால்டு, தலைமை ஆசிரியை எம்.அழகு மீனாட்சி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.