திருவாதவூரில் திருக்கல்யாண வைபவம்
மேலூா்: மேலூா் அருகிலுள்ள திருவாதவூா் திருமறை நாதா் சமேத வேதநாயகி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் வைகாசி பிரமோற்சவத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினசரி சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமறை நாதா்-பிரியாவிடை, வேதநாயகி அம்மனுக்கு சிவாச்சாரியா்கள் காலை 9.30 மணியளவில் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனா். இதை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசித்தனா். அப்போது, பெண்கள் மங்கள நாண்களை மாற்றிக்கொண்டனா்.