மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்
மதுரை: மதுரை மண்டலத்தில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து வருங்கால வைப்பு நிதி நிறுவன மதுரை மண்டல ஆணையா் அமியகாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மத்திய அரசின் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில், மதுரை மண்டலத்துக்குள்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகா், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிலாளா் மாநில ஈட்டுறுதிக் கழக அலுவலகங்களில் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்
மே 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு முகாம் தொடங்கும். வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரா்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரா்களின் வருங்கால வைப்பு நிதி தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பங்கேற்பவா்கள், ற்.ப்ஹ்/ய்டபற் என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் என்றாா் அவா்.