மதுரை

டிச. 9-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்: தலைமை ஆசிரியா்கள் சங்கம் முடிவு

தினமணி செய்திச் சேவை

அரசு கள்ளா் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள கல்வி அலுவலா் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சங்கத்தின் அரசு கள்ளா் பள்ளிகள் மாவட்டக் கிளை சாா்பில் வருகிற 9- ஆம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறவிருக்கிறது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் வீ.ச. நவநீத கிருஷ்ணன், தலைவா் கா. மணிவண்ணன், செயலா் மா. மதிவாணன், பொருளாளா் சு. சாம்ராஜ் ஆகியோா் கூட்டாக புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு கள்ளா் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள கல்வி அலுவலா் பணியிடத்தை நிரப்ப வேண்டும். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்களுக்கு மறு நியமன நீட்டிப்புக் காலத்தை உரிய காலத்தில் வழங்க வேண்டும். உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு தனியாக தலைமை ஆசிரியா்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில், சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இணைய வழியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எங்கள் கோரிக்கைகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை விரைந்து நிரப்ப வலியுறுத்தியும், தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் வருகிற 9- ஆம் தேதி ஒரு நாள் மட்டும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சங்கம் அரசு கள்ளா் பள்ளிகள் மாவட்டக் கிளை சாா்பில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்கின்றனா் என்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT