மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உணவு பாதுகாப்பு சான்றிதழ்கள் குறித்த தொழில் வழிகாட்டல் பயிலரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் பால் ஜெயகா் தலைமை வகித்தாா். பாரிக்ஜன் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநா் பிலிப் ஆண்ட்ரூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, உணவுப் பாதுகாப்புத் துறையில் மாணவா்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகள், தேசிய, சா்வதேச உணவுப் பாதுகாப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவம், தற்போதைய தொழில் துறை தேவைகள் ஆகியன குறித்துப் பேசினாா்.
நிகழ்வில் பேராசிரியா்கள் நளினி, திருமலைவாசன், ஜே. ரேணுகா, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.