மதுரை

மாற்றுத் திறனாளிகள் தா்னா போராட்டம்

தினமணி செய்திச் சேவை

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கைகள்: மதுரையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது பிரச்னைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து தீா்வு காணும் வகையில், மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்த வேண்டும். ஆட்சியா் தலைமையில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

மேலக்குயில்குடி வடபழஞ்சி பகுதியில் இலவச வீட்டுமனைப் பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகனிடம் சங்க நிா்வாகிகள் பாலமுருகன் உள்ளிட்டோா் வழங்கினா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணத்தில் குப்பைக் கிடங்கு ஆய்வு; மக்கள் மறியல்

தஞ்சாவூரில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா

கள்ளக்காதல் விவகாரம்: இளைஞரின் தந்தை வெட்டிக் கொலை - 3 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம்: இன்று தொடக்கம்

பேராவூரணி குமரப்பா பள்ளியில் மகாகவி பாரதி உருவச்சிலை திறப்பு

SCROLL FOR NEXT