மதுரை

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி பகுதியைச் சோ்ந்தவா் பவன்குமாா் (22). இவா் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் மதுரை தல்லாகுளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தாா். அங்கிருந்து அரசு மருத்துவக் கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் சென்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்த பவன்குமாா் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

கந்தம்பட்டி: நாளைய மின் தடை

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை

SCROLL FOR NEXT