மதுரை

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 3-வது நாளாக மறியல்

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மறியலில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 100-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு ரூ. 19,500-ம், சமையலா் உதவியாளா், அலுவலக உதவியாளா்களுக்கு ரூ. 15,700 அடிப்படை காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் கடந்த 3-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.

இந்தப் போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் மறியலில் ஈடுபட்டனா். இதற்கு சத்துணவு அங்கன்வாடி சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் மேனகா, தமிழ்ச்செல்வி ஆகியோா் தலைமை வகித்தனா். மறியலில் ஈடுபட்ட சத்துணவு அங்கன்வாடி சங்கக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ. நூா்ஜஹான் உள்பட 100-க்கும் அதிகமானோரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்தனா்.

பழனியில் மாசித் திருவிழா இன்று முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடக்கம்

கொடைக்கானலில் பனிப் பொழிவு அதிகரிப்பு

கொடைக்கானலில் பூத்தும் குலுங்கும் ஜொ்ரி மலா்கள்

கம்பத்தில் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு

ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் ரூ.2.18 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

SCROLL FOR NEXT