மதுரை

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு புதிய அறிவிப்புகள் இல்லாததைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலை பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் சட்டத்தை அமல்படுத்தவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தவும் மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததைக் கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும், செயற்கைக் கை, செயற்கைக் கால், காது கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்களுக்கான வரிகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவா் என். மதிபாரதி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா். ஜெயா முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எம். பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலா் ஆ. பாலமுருகன், இணைச் செயலா் டி. குமரவேல் ஆகியோா் பேசினா்.

மாவட்டப் பொருளாளா் பி. மணிகண்டன், துணைத் தலைவா்கள் வி. மாரியப்பன், எஸ். செல்லம்மாள், கே. பரமசிவன், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT