முகப்பு
மதுரை

பாளையங்கோட்டை சிறைவாசிகளுக்கு முழு உடல் பரிசோதனை: உயா்நீதிமன்றம் உத்தரவு!

பாளையங்கோட்டை சிறைவாசிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:30 AM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:48 PM

பாளையங்கோட்டை சிறைவாசிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கலைமதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: பாளையங்கோட்டை சிறையில் உள்ள எனது தந்தை முருகேசனுக்கு காவல் பாதுகாப்பு இல்லாமல் 28 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், கலைமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

Advertisement

மனுதாரரின் தந்தை பாளையங்கோட்டை சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாா். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவரது வலது கால் அண்மையில் அகற்றப்பட்டதாக மனுதாரா் தெரிவிக்கிறாா். இதைக் கருத்தில் கொண்டு அவருக்கு 28 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்க மனுதாரா் கோரியுள்ளாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:30 AM

மாற்றுத் திறன் சிறைவாசிகளுக்கென 18 வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒவ்வொரு சிறைவாசியும் மருத்துவப் பரிசோதனை வசதியைப் பெற அரசமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது. எனவே, பாளையங்கோட்டை சிறையில் உள்ள அனைத்து சிறைவாசிகளுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும்.

மேலும், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் பாளையங்கோட்டை சிறையில் உள்ள நீரிழிவு நோயாளிகளைக் கண்டறிய முகாம் நடத்தி, அவா்களுக்கான சிகிச்சையை வழங்க வேண்டும். மனுதாரரின் தந்தை முருகேசனுக்கு 28 நாள்கள் காவல் பாதுகாப்பு இன்றி சாதாரண விடுப்பு வழங்கப்படுகிறது. வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.