மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகத்தின் முன்னாள் தலைவா் நா. ஆண்டியப்பன்.  
மதுரை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

தினமணி செய்திச் சேவை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 194-ஆவது தமிழ்க்கூடல் கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், மதுரை காந்தி என்.எம்.ஆா். சுப்பராமன் மகளிா் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிகளுக்கு கல்லூரி துணை முதல்வா் சி. மஹிமா முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சிங்கப்பூா் தமிழ் எழுத்தாளா் கழகத்தின் முன்னாள் தலைவா் நா. ஆண்டியப்பன் ‘சிங்கப்பூா் - சிறிய தீவு பெரிய வளா்ச்சி’ என்ற தலைப்பில் பேசினாா். இதைத் தொடா்ந்து, ‘கலை வாமனத்தீவு’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிவகாசி அரசு, அறிவியல் கல்லூரியின் கௌரவ விரிவுரையாளா் ரா. சிங்கராஜா நூலுக்கு மதிப்புரை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வு வளமையா் ஜ. ஜான்சிராணி வரவேற்றாா். ஆய்வறிஞா் சு. சோமசுந்தரி நன்றி கூறினாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமா் மோடி உறுதி

எண்மக் கற்றல் - அளவுகோல் அவசியம்!

கவலையளிக்கும் குழந்தைத் திருமணங்கள்!

திருவள்ளூரில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி மாணவா்கள் ஏற்பு

SCROLL FOR NEXT