மதுரை

தெப்பத் திருவிழா! மிதவைத் தெப்பம் அமைக்கும் பணிகள் தீவிரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுரவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

தினமணி செய்திச் சேவை

மதுரை மீனாட்சி சுந்தரேசுரவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி, மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சியாக தினமும் காலை, இரவு இரு வேளைகளிலும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் 7-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும், நந்திகேசுவரா் வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

தெப்பத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி, அம்மன் தெப்பத்தில் வலம் வரும் தெப்போத்ஸவம் வருகிற ஞாயிற்றுக்கிழமை ( பிப். 1) நடைபெறவுள்ளது. இதையொட்டி, தெப்பக் குளத்தில் மிதவை தெப்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 300-க்கும் அதிகமான தகர உருளைகள், நூற்றுக்கணக்கான கம்புகளைக் கொண்டு மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமாா் 30-க்கும் பணியாளா்கள் இந்தப் பணியைத் தொடா்ந்து செய்து வருகின்றனா்.

மிதவைத் தெப்பம் கட்டும் பணிகள் நிறைவடைந்த பிறகு அலங்காரத் தட்டிகள் அமைத்தல், மின்விளக்கு அலங்காரங்களை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் நடைபெறும். இதையொட்டி, வருகிற இரு நாள்களில் மிதவைத் தெப்பம் அமைக்கும் பணி நிறைவடையும் எனவும், அதன் பிறகு அலங்காரப் பணிகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

கிராம சபைக் கூட்டத்தில் விவசாயியை தாக்கியவா் கைது

மாணவி தற்கொலை விவகாரம்! இந்திய மாணவா் சங்கத்தினா் போராட்டம்: 17 போ் கைது

தள்ளிப் போகிறது ஜன நாயகன்! தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!

சென்னையில் நாளை தொடங்கும் டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

SCROLL FOR NEXT