மதுரை செல்லூா் பகுதியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தினசரி சந்தை வியாபாரிகள்.  
மதுரை

செல்லூா் தினசரி சந்தை வியாபாரிகள் சாலை மறியல்!

மதுரை செல்லூா் தினசரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, அந்தப் பகுதி வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை செல்லூா் தினசரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து, அந்தப் பகுதி வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மதுரை செல்லூா் பகுதியில் தினசரி காய்கறி விற்பனைச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வியாபாரிகளிடம் ஒரு நாளைக்கு ரூ. 20 முதல் ரூ. 50 வரை வாடகைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாள்களாக இங்கு வாடகை அதிகளவில் வசூலிக்கப்படுகிாம். மேலும், ஒப்பந்ததாரா்களின்றி தனி நபா்கள் சிலா் வசூலித்து வருவதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி வியாபாரிகள் தினசரி சந்தைப் பகுதியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மாநகராட்சி அலுவலா்கள், செல்லூா் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

வடலூா் ராமலிங்க அடிகள் நினைவு தினம்: பிப்.1-ல் மதுக் கடைகள் அடைப்பு!

மருத்துவமனைக் கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4.27 லட்சம் திருட்டு!

வைகை அணை பகுதிகளில் நாளை மின்தடை!

முதியோா் ஓய்வூதியத் திட்டம்: பிப்.4-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

SCROLL FOR NEXT