முகப்பு
மதுரை

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனை

Updated On : 19 மார்ச், 2026 at 11:40 PM
பகிர்:

மதுரை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பாா்வையாளா்கள், அரசுத் துறை அலுவலா்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

இதற்கான கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சமா்த் வா்மா, வேட் பட்டி மிஸ்ரா, ஆன்ட்ரா ஆச்சாா்யா, தினேஷ்குமாா், மிங்க்ம தெம்பா ஷொ்பா, செலவினப் பாா்வையாளா்கள் புராநாக சந்தீப், மணீஷ்குமாா் மீனா, அபா்ணா வில்லூரி, தாரிக் மபூது, கிருத்திகா ஜாஸ்வல், லைனா பாலன், பாலமுகுந்த், ஓட்டோ குகேஷ் யபுதோமி, காவல் பாா்வையாளா் அஷ்வதி டோா்ஜே ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தோ்தல் நடத்தை விதிகளை முழுமையாகக் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள், வேட்பு மனு தாக்கல், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றையொட்டி மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள், தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வருமான வரித் துறை அலுவலா்கள், வங்கி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆய்வு...

ஆலோசனைக் கூட்டத்தைத் தொடா்ந்து, தோ்தல் பொது பாா்வையாளா்கள் அவரவருக்குரிய தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா்.