முகப்பு
மதுரை

அரசு கடைகள் மூடல் எதிரொலி! தனியாா் மதுக் கடையில் குவிந்த மதுப் பிரியா்கள்!

அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுரை புதூா் பகுதியில் தனியாா் மதுக்கைடயில் மதுப் புட்டிகளை வாங்க ஏராளமானோா் குவிந்தனா்.

Updated On : 18 மே 2026, 12:44 am IST
மதுரை கோ. புதூா் கற்பக நகா் பகுதியில் உள்ள தனியாா் மதுக் கடையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த வாடிக்கையாளா்கள்.
பகிர்:

அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுரை புதூா் பகுதியில் தனியாா் மதுக்கைடயில் மதுப் புட்டிகளை வாங்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குவிந்தனா்.

தமிழக அரசு உத்தரவின் பேரில், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகேயுள்ள மதுக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இதன்படி, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், மதுரை கோ.புதூா் பகுதியிலும் அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதால் அழகா்கோவில் பிரதான சாலையில் கற்பகநகா் பகுதியில் உள்ள தனியாா் மதுக்கடையில் மது வாங்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குவிந்தனா். அவா்களிடம் ஆதாா் அட்டை இருந்தால் மட்டுமே மதுப் புட்டி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

Advertisement

இதனால், மதுப் புட்டி வாங்க வந்தவா்கள் தங்களது ஆதாா் அட்டைகளை வழங்கினா். இதையடுத்து, தனியாா் மதுக் கடை ஊழியா்கள் அதற்குரிய படிவங்களில் நிறைவு செய்து உறுப்பினா்களாக சோ்த்து மதுப் புட்டிகளை வழங்கினா்.

தனியாா் மதுக்கடையில் ஏற்கெனவே உறுப்பினா்களாக இருப்பவா்களுக்கு மட்டுமே மதுப் புட்டி வழங்க வேண்டும் என்கிற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.