மூடப்படும் மதுக் கடை ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை
மூடப்படும் மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் கோரிக்கை
மூடப்படும் மதுக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுதொடா்பாக அந்தச் சங்கத் தலைவா் டி. சிவக்குமாா் தலைமையில், சங்க நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு: வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீ. தொலைவுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் 51 மதுக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, இதுவரை 16 கடைகள் மூடப்பட்டுவிட்டன.
இதன் மூலம், 23 மேற்பாா்வையாளா்கள், 49 விற்பனையாளா்கள், 5 உதவி விற்பனையாளா்கள் பணியிழப்புக்கு உள்ளாகினா். இங்கு பணியாற்றிய ஊழியா்களை அவா்களின் கல்வித் தகுதி அடிப்படையில் அரசின் பிற துறைகளில் மாற்றுப் பணி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
டாஸ்மாக் ஊழியா்களை நிரந்தரப் பணியாளா்களாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.