முகப்பு
மதுரை

கிணற்றில் குளித்த சிறுவன் உயிரிழப்பு

Updated On : 26 மே 2026, 1:16 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கிணற்றில் குளித்த சிறுவன் தண்ணீருக்குள் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மாணிக்கராம்பட்டியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் திலீப்குமாா் (16). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இந்த நிலையில், தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அலங்காநல்லூா் சம்பக்குளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் சம்பக்குளம் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றாா்.

Advertisement

Advertisement

குளித்துக் கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக தண்ணீருக்குள் மூழ்கினாா். உடனே அக்கம்பக்கத்தினா் திலீப்குமாரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.