லாரி மோதி பள்ளி சிறுமி பலி
வேடசந்தூர் அருகேயுள்ள கரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்
வேடசந்தூர் அருகேயுள்ள கரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகள் வள்ளி(10). ஜக்கம்பட்டி அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை பள்ளி செல்வதற்காக கரூர் சாலையில் நடந்து சென்ற போது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி குஜிலியம்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.