கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி
கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவின்பேரில், கொடைக்கானல் வட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி, வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். வட்டாட்சியர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
வருவாய் ஆய்வாளர் சங்கர் வரவேற்றார். மேல்மலைக் கிராமங்களான கூக்கால், வில்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், பூண்டியைச் சேர்ந்த மக்கள் பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்கள் செய்தனர்.
Advertisement
Advertisement
மொத்தம் 151 மனுக்கள் பெறப்பட்டு, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை என 32 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.