ஜேப்படி: இருவரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்
பழனி அடிவாரத்தில் ஜேப்படியில் ஈடுபட்டதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பழனி அடிவாரத்தில் ஜேப்படியில் ஈடுபட்டதாக இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
புது ஆயக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் முருகேசன் (42). இவர் பழனி அடிவாரம் சரவணப் பொய்கை அருகே நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவைச் சேர்ந்த தன்னாசி மகன் சின்னகருப்பன் (42), மதினா நகர் இஸ்மாயில் மகன் ஜாபர்சாதிக் (34) ஆகியோர் முருகேசன் பாக்கெட்டில் இருந்த பணத்தை ஜேப்படி செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது கூச்சலைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து அடிவாரம் போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.