டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் நிகர லாபம் 33.66 சதவீதம் சரிந்து ரூ. 9.10 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
புதுதில்லி: அதிகரித்த செலவினங்களின் காரணமாக, 2025-26 நிதியாண்டின் 4வது காலாண்டில், டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் நிகர லாபம் 33.66 சதவீதம் சரிந்து ரூ. 9.10 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 13.72 கோடி நிகர லாபத்தைப் ஈட்டியிருந்தது.
நிறுவனத்தின் 4வது காலாண்டில், செலவினங்கள் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ. 37.97 கோடியிலிருந்து சற்று உயர்ந்து ரூ. 44.84 கோடியாக அதிகரித்துள்ளது. எனினும், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ. 55.31 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ. 54.15 கோடியாக இருந்தது.
Advertisement
Advertisement
2026 நிதியாண்டு முழுமைக்கும் பார்க்கையில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 60.84 கோடியாக இருந்தது. இது 2025 நிதியாண்டிலிருந்த ரூ. 52.89 கோடியை விட 15 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ரூ. 203.28 கோடியாக இருந்த செயல்பாட்டு வருவாய், இந்த நிதியாண்டு முழுவதிலும் 23.17 சதவீதம் உயர்ந்து ரூ. 250.37 கோடியாக அதிகரித்துள்ளது.
மார்ச் 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் கைவசம் உள்ள நிலுவை ஆர்டர்களின் மதிப்பு ரூ. 727.77 கோடியாக உள்ளது.
Denta Water and Infra Solutions has reported a 33.66 per cent fall in standalone net profit at Rs 9.10 crore for the fourth quarter of FY 2025-26.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.