திண்டுக்கல்

நத்தம், செம்பட்டியில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

DIN

நத்தம் மற்றும் செம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்தது. நண்பகல் முதல் மாலை வரை அனல் காற்று வீசத் தொடங்கியதால், பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் வெயிலின் தாக்கம் குறைந்து, மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. இதனிடையே, நத்தம் பகுதியில் இடி மின்னலுடன் 30 நிமிடங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்தது. அதேபோல் செம்பட்டியிலிருந்து வத்தலகுண்டு வரையிலும் 20 நிமிடங்கள் மழை பெய்தது. இதனால், கடும் வெப்பத்தில் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT