கொடைக்கானலில் மண் சரிவில் சிக்கிய கூலித் தொழிலாளர்கள் 2 பேர் உயிருடன் மீட்பு
கொடைக்கானலில் வியாழக்கிழமை தனியார் இடத்தில் அஸ்திவாரம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கிய 2 கூலித் தொழிலாளர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
கொடைக்கானலில் வியாழக்கிழமை தனியார் இடத்தில் அஸ்திவாரம் தோண்டும் போது மண் சரிவில் சிக்கிய 2 கூலித் தொழிலாளர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியிலுள்ள துரைராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக கொடைக்கானலைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மண் சரிவு ஏற்பட்டதில் வீரமணி (48), அந்தோணி முத்து(52) ஆகிய இருவரும் மண்ணில் புதைந்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலமாகவும், அப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் உதவியுடனும், சுமார் 1 மணி நேரம் போராடி அவர்களை உயிருடன் மீட்டனர். இதன் பின் மீட்கப்பட்டவர்கள் இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.