திண்டுக்கல்

கீரனூர் குருகுலத்தில் ஆன்மிகப் பெருவிழா

DIN

பழனியை அடுத்த கீரனூர் சன்மார்க்க குருகுலத்தில் ஆன்மிகப் பெருவிழா நடைபெற்றது.
சண்முகநதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சன்மார்க்க குருகுலத்தில் அறுபது ஆண்டுகளாக ஆதரவற்ற குழந்தைகள் தங்குமிடம், குருகுல நடுநிலைப் பள்ளி, ஆதரவற்ற முதியோர் குடில், மாற்றுத்திறனாளிகள் காப்பகம், தர்மசாலை, ஞானசபை, தையல் பயிற்சி பள்ளி மற்றும் யோகா மையம் ஆகியவை உள்ளன. இங்கு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்மிகப் பெருவிழா நடைபெற்றது. சனிக்கிழமை காலை சத்திய ஞானதீபம் ஏற்றுதலை திருவண்ணாமலை அருள்பூரண சித்தியோகம் தலைவர் பாபுசாது தொடக்கி வைத்தார். குருகுலப் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், குருகுல வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றன.
குழந்தைகளுக்கான கூடுதல் விடுதிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கோவை காவல்துறை அதிகாரி பாரி பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த வளாகம் கூடுதல் கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பழனி டிஎஸ்பி., வெங்கட்ராமன், பொறியாளர் தங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT