திண்டுக்கல்

பழனியில் அக்னி நட்சத்திர கிரிவலம் இன்று நிறைவு

DIN

பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் மற்றும் மலைக்கோயிலில் அருள்மிகு கைலாசநாதர் சன்னதிகளில் மே 8ஆம் தேதி சீதக்கும்பம் வைக்கப்பட்டு அக்னி நட்சத்திரம் துவங்கியது. முன் ஏழு, பின் ஏழு என 14 நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது. இந்த நாள்களில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். முன் ஏழு நாள்களில் வலமாகவும், பின் ஏழு நாள்களில் இடமாகவும் சுற்றுகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) அக்னி நட்சத்திரம் நிறைவு பெறுவதால் மலைக் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மியினர் ஆர்ப்பாட்டம்!

மோடி விரைவில் மேடையிலேயே கண்ணீர் விடும் நிலை வரக்கூடும்: ராகுல் காந்தி

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT