திண்டுக்கல்

பழைய வத்தலகுண்டு மகாபரமேஸ்வரி அம்மன் தேரோட்டம்

DIN

திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டுவில் மகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், மாவிளக்கு எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.
திருவிழாவில், முக்கிய நிகழ்வாக சனிக்கிழமை மாலை அருள்மிகு மகா பரமேஸ்வரி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. பழைய வத்தலகுண்டு முக்கிய வீதிகளில் தேர் உலா வந்தது.
இந்நிகழ்ச்சியைக் காண வத்தலகுண்டு, நிலக்கோட்டை, குரும்பபட்டி, விராலிப்பட்டி, ரெங்கப்ப நாயக்கன்பட்டி, ஏ.வாடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்து அம்மனைத் தரிசனம் செய்தனர். தேரோட்டம் நடைபெறுவதையொட்டி வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT