ஒட்டன்சத்திரத்தில் புறவழிச்சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு
ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை அமைய உள்ள பகுதிகளை வியாழக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை அமைய உள்ள பகுதிகளை வியாழக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒட்டன்சத்திரத்தில் புறவழிச்சாலை அமைக்க லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லபட்டி, ஒட்டன்சத்திரம் நகரம், அரசப்பபிள்ளைபட்டி ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு அரசு சார்பில் ஏற்கெனவே இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் அந்த நிலத்தின் அருகே இடையூறாக உள்ள புளிய மரங்கள் மற்றும் மின் இணைப்பு கம்பங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் கோவை திட்ட இயக்குநர் உதயசங்கர், நில எடுப்பு தனி வட்டாட்சியர் பழனிச்சாமி, தனி வருவாய் ஆய்வாளர் மகாராஜன், தனி சார் ஆய்வாளர் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.