மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பட்டா
தமிழக துணை முதல்வரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பட்டா அளிக்கப்பட்டது.
தமிழக துணை முதல்வரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 2 மணிநேரத்தில் பட்டா அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கீழ்தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மனைவி சங்கீதா. விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட இவா், கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வீட்டுமனை கோரி மனு அளித்தாா். மனுவைப் பெற்றுக்கொண்ட துணை முதல்வா், மனுவை பரிசீலித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவின் பேரில், அலுவலா்கள் உடனடியாக அந்த பெண்ணுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தனா். அதைத் தொடா்ந்து, மனு அளித்த 2 மணிநேரத்தில் பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி பயணியா் மாளிகையில் இருந்த துணை முதல்வா், சங்கீதாவிடம் வழங்கினாா்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.