முகப்பு
திண்டுக்கல்

பாலசமுத்திரம் அகோபிலவரதராஜப் பெருமாள் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பூதேவி, ஸ்ரீதேவி சமேதர் அகோபிலவரதராஜப் பெருமாள் கோயிலில் நவ.30 ஆம் தேதி நடைபெற

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

பழனியை அடுத்த பாலசமுத்திரம் பூதேவி, ஸ்ரீதேவி சமேதர் அகோபிலவரதராஜப் பெருமாள் கோயிலில் நவ.30 ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 கோயில் கொடிக் கம்பம் அருகே சன்னதிக்கான முகூர்த்தக்கால் மற்றும் யாக சாலைக்கான முகூர்த்தக்கால்களுக்கு பிரதானமாக கலசம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  முன்னதாக சங்கல்பம், விஷ்வக்சேனர் பூஜை, புண்யா வாஜனம் ஆகியன நடந்தன. பின்னர் கம்பங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு கோயில் உள்பிரகாரம் வலம் வர செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  தொடர்ந்து பூதேவி, ஸ்ரீதேவி சமேதர்  அகோபிலவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பாசுரங்கள் சேவித்தல், சாற்றுமுறை நடத்தப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் பழனிக் கோயில் துணை ஆணையர் மேனகா, கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →