முகப்பு
திண்டுக்கல்

திரைப்படத்துறையில் இருந்து வரும் தலைவர்கள் தமிழகத்துக்கு தேவையில்லை: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் நல்லசாமி

திரைப்படத்துறையில் இருந்து வரும் தலைவர்கள் தமிழகத்துக்கு தேவையில்லை என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச்  செயலர் நல்லசாமி  தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திரைப்படத்துறையில் இருந்து வரும் தலைவர்கள் தமிழகத்துக்கு தேவையில்லை என்று தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்புச்  செயலர் நல்லசாமி  தெரிவித்தார்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கொடைக்கானலில் ஆரஞ்சு பழங்களை அதிக அளவு விளைவிக்க விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். அதே போல் ஆரஞ்சு பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து அதன் மூலம் மது தயாரிக்க அரசு முன் வர வேண்டும். மேலும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையும் பூண்டுக்கு கொடைக்கானலிலேயே அரசு சந்தை அமைத்தால் விவசாயிகளின் வாழ்வு நலம் பெறும்.
தமிழகத்தில் கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை நீக்க வேண்டும். இந்த தடை நீடித்தால் வரும் ஜனவரி 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கப்படும். இதற்காக தமிழக அரசு எங்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கட்டும்.
 நடிகர் கமல் உள்ளிட்ட  திரைப்படத்துறையிலிருந்து வரும் தலைவர்களை நம்பி பொதுமக்கள் வாக்களிக்க வேண்டாம். அவர்களை எங்கள் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது. திரைப்படத்துறையில் இருந்து வரும் தலைவர்கள்  தமிழகத்துக்கு தேவையில்லை.
நிலத்தடி நீர் தற்போது ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழகம் விரைவில் பாலைவனமாக மாறி விடும். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →