நகர்ப்புற நக்சல் போல் நடந்து கொள்கிறார் ராகுல்: கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி குறித்து கிரிராஜ் சிங் விமர்சனம்..
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நகர்ப்புற நக்சல் போல் நடந்துகொள்வதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ராகுல் காந்தி அவையில் விவாதம் மற்றும் வாக்களிப்பதைத் தவிர்த்து வருவதாகவும், மேற்கு ஆசிய மோதல், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதங்களைக் குறிப்பிட்டார்.
எனக்குப் புரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு எதிர்க்கட்சி தலைவரை நான் பார்த்ததில்லை.
அவருக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை, அவர் நகர்ப்புற நக்சல் போல நடந்து கொள்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் ஏன் அவர்களிடமிருந்து நீங்கள் பயந்து ஓடுகிறீர்கள்?
முகலாய வம்சத்தின் கடைசி முகலாய பேரரசர் போல, காங்கிரஸுக்கும் அவர் அதே தான். போலி காந்தி குடும்பத்தின் அறியாமையிலிருந்த கடைசி இளவரசர் என்று அவர் குற்றம் சாட்டினார்.