முகப்பு
இந்தியா

அரசியலுக்கு வந்திருக்கவில்லையெனில்.. ராகுல் பகிர்ந்த சுவாரசியம்!

அரசியல்வாதி அல்ல.. கேரளத்தில் ராகுல் பகிர்ந்தவை பற்றி..

Updated On : 7 மார்ச், 2026 at 2:06 PM
ராகுல் காந்தி - x.com
பகிர்:
Updated On : 7 மார்ச், 2026 at 1:20 PM

அரசியலுக்கு வந்திருக்கவில்லையென்றால் விண்வெளி துறையில் தொழில்முனைவோராக இருந்திருப்பேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

கேரளம் வந்துள்ள ராகுல் காந்தி டெக்னோ பார்க்கில் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களுடன் கலந்துரையாடினார். உரையாடலின்போது அவர்கள் கேட்ட கேள்விக்கு ராகுல் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பலரால் தன்னை ஒரு அரசியல்வாதி என்று வரையறுக்கப்பட்டதாகவும், ஆனால் உண்மையில் அவர் வேறு பல விஷயங்களைச் செய்ததாக கூறினார். ஒருவரை அரசியல்வாதி, தொழில்நுட்ப வல்லுநர், பொறியாளர் என்று அழைப்பது சுருக்கமான வரையறைகள் என்று தான் கருதுவதாக அவர் கூறினார்.

Advertisement

Updated On : 7 மார்ச், 2026 at 1:58 PM

நான் அரசியலில் ஈடுபடவில்லை எனில், விண்வெளி உலகில் தொழில்முனைவோராக இருந்திருப்பேன். நான் ஒரு விமானி, என் தந்தை, ஏன் என் சித்தப்பாவும் கூட விமானி தான் என்று அவர் கூறினார்.

நாம் எல்லாவற்றையும் பற்றி ஆர்வமாக இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் புரிதல் இருப்பது அவசியம். எல்லாவற்றையும் திறந்த மனதுடன் அணுக வேண்டும், அப்போதுதான் இலக்கை அடைய முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

கேரளத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் உள்ள ஸ்ரீ நாராயண குருவின் சமாதியைப் பார்வையிட்டார். அதோடு, இடுக்கியில் உள்ள குட்டிக்கானத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Congress leader Rahul Gandhi on Saturday said that if he was not in politics, he would probably be doing some entrepreneurship in the aerospace world.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.