திண்டுக்கல்

நெய்க்காரப்பட்டி பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து புதன்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரு பள்ளி மாணவிகள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பேரூராட்சி சார்பில் சுகாதாரப்பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாததே காரணம் எனக் கூறி புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெய்க்காரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது நெய்க்காரப்பட்டியில் வீதிகள் தோறும் சுகாதாரப்பணிகள் கண்காணிக்கப்படவேண்டும். பொது சுகாதார கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT