திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு 14 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் 14 இடங்களில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசின் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையும் வகையில், மாவட்டத்தில்  உள்ள 13  ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 முகாம்களில் கலந்து கொள்ளும் பயனாளிகளுக்கு இலவச தேசிய அடையாள அட்டை, இலவச உதவி உபகரணங்கள் (மூன்று சக்கர வண்டி சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, பிரெயில் கடிகாரம், கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, வங்கிக் கடன் உதவி, பராமரிப்பு உதவித் தொகை, இலவச பேருந்து பயணச் சலுகை போன்ற உதவிகள் வழங்கப்பட உள்ளன.
  அதன்படி வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (அக். 13) நடைபெறும் முகாமில் வேடசந்தூர்  ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். குஜிலியம்பாறை ஒன்றியத்திற்கு,  குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் அக். 20ஆம் தேதியும், வடமதுரை ஒன்றியத்திற்கு, வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக். 24ஆம் தேதியும், நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு, நிலக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக்.25ஆம் தேதியும்,  வத்தலகுண்டு ஒன்றியத்திற்கு, வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக்.26 ஆம் தேதியும், ஆத்தூர் ஒன்றியத்திற்கு, சின்னாளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் அக்.31ஆம் தேதியும், நத்தம் ஒன்றியத்திற்கு, நத்தம் டி.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவ.1ஆம் தேதியும்,  சாணார்பட்டி ஒன்றியத்திற்கு, சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நவ.2 ஆம் தேதியும், தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு, தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நவ. 7ஆம் தேதியும், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்கு,  ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவ.8ஆம் தேதியும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு, கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நவ.9ஆம் தேதியும், பழனி ஒன்றியத்திற்கு, பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நவ.14ஆம் தேதியும், கொடைக்கானல் ஒன்றியத்திற்கு,  கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நவ.15ஆம் தேதியும், கே.சி.பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நவ.16 ஆம் தேதியும் முகாம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்: சித்தராமையாவுக்கு ராகுல் கடிதம்

பேருந்தில் காசுகளை சிதற விட்டு நகை திருடிய ஆந்திரப் பெண் கைது

6 மணி நேரம் தாமதமாக வந்த விமானம்: 300 பயணிகள் அவதி

SCROLL FOR NEXT