FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?

பதவி உயர்வு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி அளித்த பதிலில்..

Updated On : 14 மார்ச் 2026, 9:52 am IST
அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி ஜூலி ஸ்வீட் - ANI
பகிர்:

தகவல் தொழில்நுட்பத் துறையில், உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அக்செஞ்சர் நிறுவன தலைமை செயல் நிர்வாகி ஜூலி ஸ்வீட், தன்னுடைய நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியிருக்கும் மின்னஞ்சல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இது, அக்செஞ்சர் நிறுவன ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்துத் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களுக்குமான தகவலாகவும் மாறியிருக்கிறது.

ஜூலி ஸ்வீட் அனுப்பியருக்கும் மின்னஞ்சலில், இந்த ஆண்டு பதவி உயர்வை எதிர்பார்க்கும் ஊழியர்கள், நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதில் தங்களுடைய அபரிமிதமான திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Advertisement

Advertisement

கன்சல்சன்டி நிறுவனங்கள், இப்போது செயல்படும் விதத்தில் செயற்கை நுண்ணறி திறன்கள் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டதால் இந்தப் பரிந்துரை வலுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் உயர் பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்று ஊழைக்கும் ஊழியர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு திறன் எனப்து மிகவும் அவசியமானதாக மாறிவிட்டதாக, பாட்காஸ்ட் நேர்காணல் ஒன்றில் ஜூலி கூறியிருக்கிறார்.

நீங்கள் பதவி உயர்வு பெற விரும்பினால், அக்செஞ்சர் நிறுவனத்தை நடத்துவதற்கான வழிமுறைகளை நீங்கள் கண்டடைய வேண்டும். இவை, நிறுவனத்தை இயக்குவதற்கான புதிய கருவிகள். நாங்கள் பூஜ்ஜியத்திலிருந்து இதனை உங்களுக்குச் சொல்லவில்லை, ஒரு மாதத்தில் பதவி உயர்வு கிடைக்காது என்று, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது, இதனை பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்வதை உறுதி செய்யுங்கள், ஊழியர்கள் பயன்படுத்த சரியான வாய்ப்புகளைக் கொண்ட சூழல் எங்களிடம் இருப்பதை உறுதி செய்துகொண்டு, பின்னர்தான், இது அக்செஞ்சர், எங்களது செயல்முறை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது என்று ஜூலி குறிப்பிட்டுள்ளார்.

அக்செஞ்சர் நிறுவனங்ததின் செயல்பாடுகள் மற்றும் ஊழியர்களின் பணிச் சூழலில் செயற்கை நுண்ணறிவை விரிவுபடுத்தியிருக்கும் நிலையில், ஜூலியின் இந்த கருத்து வெளியாகியிருக்கிறது.

மேலும், ஊழியர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு குறித்தும், அவர்களது திறனை மேம்படுத்தும் வகையிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்துள்ளது. புதிய செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு ஏற்ப பணியை மாற்றிக் கொள்ள இயலாதவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

Accenture CEO's answer on what to do if you want a promotion...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments