கொடைக்கானலில் சாரல் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே நகர் பகுதியில் காட்டெருமை உலா வந்ததால் அவர்கள் அச்சமடைந்தனர்.
கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே நகர் பகுதியில் காட்டெருமை உலா வந்ததால் அவர்கள் அச்சமடைந்தனர்.
இங்கு தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பகல் நேரங்களில் மிதமான வெயிலும், அவ்வப்போது மேகமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்வதால் குளுமையான சீதோஷன நிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் ஏரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும் ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்கின்றனர். மேலும் அவர்கள் நடைபயிற்சியும் மேற்கொள்கின்றனர். இதனால் ஏரிச்சாலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.
நகர்ப் பகுதியில் காட்டெருமை உலா: இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலில் பிற்பகலில் லேசான சாரல் மழையும் விட்டு விட்டு சாரலும் நிலவியது. இதனிடையே நகர்ப் பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்ததால் அவர்கள் அச்சமடைந்தனர். அதன் பின் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அதை வனப் பகுதிக்குள் விரட்டினர்.