முகப்பு
திண்டுக்கல்

சாகித்ய அகாதெமி தமிழ் குழு உறுப்பினராக காந்தி கிராமப் பல்கலை. பேராசிரியர் தேர்வு

சாகித்ய அகாதெமி தமிழ் குழு உறுப்பினராக காந்தி கிராம பல்கலை. பேராசிரியர் பா.ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:56 AM
பகிர்:

சாகித்ய அகாதெமி தமிழ் குழு உறுப்பினராக காந்தி கிராம பல்கலை. பேராசிரியர் பா.ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காந்தி கிராம பல்கலை. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசின் உயர்மட்ட இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமியின் தமிழ் குழு உறுப்பினராக பா.ஆனந்தக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு தமிழ் குழுவின் உறுப்பினராகச் செயல்படுவார். மலையாள மொழியிலிருந்து "யந்திரம்' என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக கடந்த 2008 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பிற்கான பிரிவில் சாகித்ய அகாதெமி விருது ஆனந்தகுமாருக்கு கிடைத்துள்ளது. 
இவர் 25-க்கும் மேற்பட்ட நூல்களையும், 100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். தற்போது சாகித்ய அகாதெமி தமிழ் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனந்தக்குமாருக்கு துணைவேந்தர் சு.நடராஜன், பதிவாளர் விபிஆர் சிவக்குமார் மற்றும் தமிழத்துறைப் பேராசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.