பழனியை அடுத்த நெய்க்காரபட்டி கிரசென்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் மாறுவேடப் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகி ராஜா கெளதம் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் சித்ரா ராஜ்குமார் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில், எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து பங்கேற்றனர்.
குறிப்பாக பாரதியார், மகாத்மா காந்தி, நேரு போன்றும், பல்வேறு சித்தர்கள் போன்றும், அன்னை தெரசா, விவசாயி, காவல்துறை அதிகாரிகள் போன்று மாணவ, மாணவியர் வேடமணிந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளியின் முதல்வர் சாந்தி வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.