ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தி விழா
ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தியை முன்னிட்டு வத்தலகுண்டு மடத்தில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வேத பாராயண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீராகவேந்திரர் ஜயந்தியை முன்னிட்டு வத்தலகுண்டு மடத்தில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வேத பாராயண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காலை 8 முதல் இரவு 7 மணி வரை ஆச்சாரியர்கள் வேத பாராயணம் செய்தனர். முன்னதாக ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதணை நடைபெற்றது.
வேத பாராயணத்தை தொடர்ந்து, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அக்ராஹார வீதியில் ராகவேந்திரர் படத்துடன் திருவீதியுலா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வி.கோபாலன் சார்பில் எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிறுவனர் பிஎஸ்.கோபிநாதன் செய்திருந்தார்.