திண்டுக்கல்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமாகாவினர் ஆர்ப்பாட்டம்

DIN

திண்டுக்கல்லில் மத்திய மாநில அரசுகள் மக்கள் விரோத போக்குடன் செயல்படுவதாகக் கூறி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எல்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் ராம்தாஸ், நகரத் தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொட்ரோல்  டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
  மாநில செயலர் மச்சக்காளை, மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சின்னச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT