திண்டுக்கல்

கல்லூரியில் இயற்பியல்துறை கருத்தரங்கம்

DIN

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை இயற்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி தலைமை வகித்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் மகேந்திரன், நானோ தொழில்நுட்பம் குறித்தும், சென்னை அமெட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் சுரேஷ், நானோ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி குறித்தும், ஹைதராபாத் லார்டு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் ராஜ்சோலை ஆனந்த், கலப்பு பொருள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.
இயற்பியல் துறை கௌரவ விரிவுரையாளர்கள் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
இதில் 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இயற்பியல் துறைத் தலைவர் சுமதி வரவேற்றார். பேராசிரியர் சடையாண்டி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT