திண்டுக்கல்

கொடைக்கானலில் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதாரக் கேடு

DIN


கொடைக்கானல் பகுதிகளில் பல நாள்களாக குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் ஆனந்தகிரி, தைக்கால், இருதயபுரம், எம்.எம். தெரு, சீனிவாசபுரம், கொய்யாப்பாறை, அண்ணா சாலை, உட்வில் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதுடன், துர்நாற்றமும் வீசுகிறது.
மேலும் உணவுப் பொருள்களுடன் பிளாஸ்டிக் பைகள் கிடப்பதால் அவற்றை கால்நடைகள் உணவாக உட்கொள்கின்றன. இதனால் கால்நடைகளுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அத்துடன் சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
அதே போல் குப்பைத் தொட்டிகளில் அப்பகுதிகளிலுள்ள தனியார் மருத்துவமனைகளின் கழிவுகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நகரின் பல இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படாததால் சாலைகளிலேயே குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். எனவே கொடைக்கானல் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை ஆய்வாளர் சுப்பையா கூறியதாவது:
கொடைக்கானல் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. குப்பைத் தொட்டிகளும் சேதமடைந்துள்ளன. இருப்பினும் நகரின் பல்வேறு இடங்களில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து இடங்களிலும் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT