திண்டுக்கல்

ரூ.1.34 கோடி மதிப்பீட்டில்  நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

திண்டுக்கல் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், 83 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.சீனிவாசன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
 திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக முதல்வரின் சிறப்புக் குறைதீர்  திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூ.1.34 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார். 
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, கோட்டாட்சியர் கு.உஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT