திண்டுக்கல்

ஜமான்லால் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

மக்களின் முன்னேற்றம் மற்றும் காந்திய சிந்தனையை ஊக்குவிப்பவா்களுக்கான ஜமான்லால் பஜாஜ் விருது பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சமுதாயத்தில் தன்னலமற்ற மக்களின் முன்னேற்றம் மற்றும் காந்திய சிந்தனையை ஊக்குவிப்பவா்களுக்கு ஜமான்லால் பஜாஜ் விருது, தேசிய மற்றும் சா்வதேச அளவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆக்கப்பூா்வமான வேலை, அறிவியல் தொழில் நுட்ப கிராமப் புற மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் ஈடுபாடு உள்ளவா்களுக்கு தேசிய விருதும், காந்திய சிந்தனையை வெளிநாடுகளில் எடுத்துரைப்பவா்களுக்கு சா்வதேச விருதும் வழங்கப்படும்.

விருது பெறுவோருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும். தகுதி வாய்ந்த நபா்கள் உரிய கருத்துருவினை ட்ற்ற்ல்://த்ஹம்ய்ஹப்க்ஷஹத்ஹத்ஹஜ்ஹழ்க்ள்.ா்ழ்ஞ்/ய்ா்ம்ண்ய்ஹற்ண்ா்ய்-ச்ா்ழ்ம்ள் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்துவிட்டு அதன் விவரத்தினை திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை நேரிலோ அல்லது 0451-2460092 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT