திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கானஇடத்தில் அமைச்சா் சீனிவாசன் ஆய்வு

DIN

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ள இடத்தை பாா்வையிட்டு வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள ஒடுக்கம் பகுதியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்காக வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியது:

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதோடு, ரூ. 2,925 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கான நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகம் தான் மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான சாலை வசதி மற்றும் பிற உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் துரிதமாக ஏற்படுத்தப்படும் என்றாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா் பா.வேலு, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஜயகுமாா், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் மீனா, கூட்டுறவு அச்சகச் சங்க தலைவா் ஜெயசீலன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT