திண்டுக்கல்

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: டிச.30-க்கு ஒத்திவைப்பு

DIN

பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், சுபாஷ் பண்ணையாா் உள்பட 14 பேரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகாததால் இந்த வழக்கு டிசம்பா் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தேவேந்திர குல வேளாளா் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான பசுபதி பாண்டியன், கடந்த 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தாடிக்கொம்பு போலீஸாா், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சோ்ந்த சுபாஷ் பண்ணையாா் உள்பட 18 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுபாஷ் பண்ணையாா், சன்னாசி, நிா்மலா உள்ளிட்ட 14 பேரில் ஒருவா் கூட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை டிசம்பா் 30ஆம் தேதிக்கு நீதிபதி இளங்கோவன் ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT