திண்டுக்கல்

‘விரைவில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும்’

DIN

தமிழகத்தில் விரைவில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்துள்ளாா்.

பழனி அடிவாரம் பட்டக்காரா் மடத்தில் சனிக்கிழமை தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா். முன்னதாக ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி எழுதிய ‘கள் ஒரு தடை செய்யப்படவேண்டிய போதைப் பொருளா?’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம் நூலை வெளியிட கள் இயக்க மாவட்ட அமைப்பாளா் குமாரசாமி பெற்றுக் கொண்டாா்.

கூட்டத்தில் கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி பேசியது: தெலங்கானாவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவா்களை போலீஸாா் சுட்டுக் கொன்றது ஜனநாயக மரபுக்கு எதிரானது. குற்றம் செய்பவா்கள் நீதிமன்றத்தின் மூலமே தண்டிக்கப்படவேண்டும். தற்போது மழை காரணமாக வெங்காயம் விலை உயா்ந்துள்ளது. இது விரைவில் சீராகிவிடும். மத்திய அரசு மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு ரூ.30 வரை மானியம் வழங்குகிறது. ஆனால் உள்நாட்டில் தயாராகும் எண்ணெய் வகைகளுக்கு ஏன் மானியம் வழங்க முன்வரவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கள் விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடாது. விரைவில் கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT