திண்டுக்கல்

கொடைக்கானலில் விதிமீறல் கட்டட விவகாரம்: இரண்டாம் கட்ட ஆய்வு நிறைவு

DIN

கொடைக்கானலில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து இரண்டாம் கட்ட ஆய்வுப் பணி நிறைவடைந்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
 கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க  நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 
 அதன்பேரில் முதல் கட்டமாக 43 கட்டடங்கள் மூடி "சீல்' வைக்கப்பட்டுள்ளன. மேலும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 1415 கட்டடங்கள் மீது  மார்ச் 11 ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இந்நிலையில், இரண்டாம் கட்டமாக கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்யும் பணியில் கம்பம், திண்டுக்கல், போடி, கொடைக்கானல் நகராட்சிகளைச் சேர்ந்த  அதிகாரிகளும், காரைக்குடி, திருப்பூர், ஒசூர் பகுதிகளைச் சேர்ந்த மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட அலுவலர்களும் கணக்கெடுக்கும் பணியை நிறைவு செய்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவின்படி கொடைக்கானல் பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்த இரண்டாம் கட்ட  ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளது. 
அடுத்தக்கட்டமாக விரைவில் காவல்துறை பாதுகாப்புடன் இக்கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT