கல்லூரியில் தன்னம்பிக்கை தலைமைப் பண்பு பயிற்சி முகாம்
பழனியை அடுத்த தாளையூத்தில் உள்ள சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை
பழனியை அடுத்த தாளையூத்தில் உள்ள சுப்ரமண்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் தலைமைப்பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி நிர்வாகம் மற்றும் நெய்க்காரபட்டி அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் சுப்ரமணி தலைமை வகித்தார். தாளாளர் ஜெயலட்சுமி சுப்ரமணி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பெங்களூருவை சேர்ந்த மேஜிக் நிபுணரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான ராஜேஷ் பெர்னான்டோ சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது, மாணவ, மாணவியர் கல்வி பயிலும் போது கவனம் எங்கும் சிதறாமல் கல்வியை கற்பதில் இருக்க வேண்டும், தேர்வின் போது தேவையற்ற சந்தேகங்களை அகற்றி தேர்வை நல்லமுறையில் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் பல்வேறு "மேஜிக்' செய்து காட்டியதோடு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் தேவகி வரவேற்றுப்பேசினார்.
அரிமா சங்க மாவட்டத் தலைவர் மயில்சாமி, கந்தசாமி, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.