திண்டுக்கல்

கால்நடைகளுக்கு மானியத்தில் தீவனம் வழங்க கோரிக்கை

DIN

ஒட்டன்சத்திரம் பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மானியத்தில் தீவனம் வழங்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடுமையான வறட்சியின் காரணமாக கால்நடைகளுக்கு போதிய தீவனங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. 
அதே போல மாட்டுத்தீவனம், தவிடு, பருத்தி விதை உள்ளிட்டவை விலை உயர்ந்து விட்டது. இதனால் அவற்றை வாங்க முடியாமல் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 
மேலும் தண்ணீர், தீவனம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான கால்நடைகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இவற்றை தவிர்க்க தமிழக அரசு கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். 
அதே போல பால் விலையை கட்டுப்படியாகக் கூடிய விலையில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT